Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி இன்று அருள் பாலித்தார்.
மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை 'வசந்தோற்சவம்' என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா ஒலியுடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago