2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வட. கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது

Kamal   / 2019 நவம்பர் 30 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழத் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

கண்டியில்  இன்று (30) ஊடகங்களுக்கு இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமெனவும், அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு கிழ​க்கில் உள்ள பௌத்த உரிமைகள் தேசத்தின் அபிமானமாக கருதப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அது குறித்து தொல்லியல் திணைக்களத்துக்கு உரிய அறிவுருத்தல்கள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அதேபோல் வடக்கு கிழ​க்கில் உள்ள இராணுவம் அகற்றப்படாதெனவும், இராணுவ முகாம்கள் இருப்பதால் மக்களுக்கு சேவை வழங்கப்படுமே தவிர ஒருபோதும் மக்களுக்கு நெருக்கடியாக இராணுவம் செயற்படாதெனவும் ​தெரிவித்தார்.

அதனால் இராணுவத்தினர் இருக்க வேண்டிய பகுதிகளில் இருந்து அவர்களை அகற்போவதில்லை என்றும், யுத்தம் இருந்த காலத்திலும் வடக்கு கிழக்கு மக்களின் நெருக்கடி நிலைமைகளின் போது இராணுவமே உதவியதாக தெரிவித்த அவர், புலிகளிடமிருந்து மீண்ட மக்களுக்கு அரசாங்கத்தால் முடிந்த சகல சலுகைகளும் வழங்கப்படும் என்றார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X