2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

கடையடைப்பு...

Sudharshini   / 2016 ஜூலை 18 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ, எஸ்.கணேசன்,

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு  விற்பனை செய்ய முடியாது  என கூறி ஹட்டன், தலவாக்கலை, பொகவந்தலாவை, மஸ்கெலியா உள்ளிட்ட நகரங்களிலுள்ள கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள், இன்று திங்கட்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசியப் பொருட்களில் 15 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையாக 495 ரூபாயை அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாது என கூறி, கோழி இறைச்சி விற்பனையாளர்கள்; கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்ததால் நுகர்வோர் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .