2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நீதி கோரி…

Editorial   / 2017 மே 29 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவனினால் தீயிட்டுக் கொழுத்திக் கொலைசெய்யப்பட்ட புத்தளம், நல்லாந்தலுவப் பகுதியைச் சேர்ந்த ரீ. சர்மிலாவுக்கு நீதி கோரி, கண்டனப் பேரணியொன்று, இன்று இடம்பெற்றது.

மகளிர் அமைப்புக்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தளம் நகரில் ஆரம்பமான இப்பேரணி, புத்தளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, அங்கு இது தொடர்பிலான மகஜரைக் கையளித்து விட்டு பின்னர் பேரணியாக புத்தளம் மாவட்ட செயலகத்துக்குச் சென்று அங்கும் மகஜரை கையளித்து விட்டு பேரணி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த பேரணியின் போது, மகளிர்கள் தமது வாயைக் கறுப்புத் துணியினால் கட்டியிருந்தனர்.

எரியூட்டி கொலை செய்யப்பட்ட சர்மிலாவின் தாயும் இதில் கலந்துகொண்டார்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.முஸப்பிர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X