2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

முரசு கொட்டி வரவேற்கப்பட்ட உலக தமிழ் செம்மொழி கலை விழா...

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 3 நாள் செம்மொழி கலை விழா கோவையில் நேற்று ஆரம்பமாகியது. விழாவினை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி ஆரம்பித்து வைத்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், பறையாட் டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், சேவையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், சாட்டைகுச்சி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஜிம்னா மேளம் உள்ளிட்ட 50 வித கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டில் பங்கற்கும் விதமாக முதல்வர் கருணாநிதி இன்று கோவை புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--