A.P.Mathan / 2010 ஜூலை 17 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருக்கிறது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இரண்டாவது தடவையாக நல்லூர் கந்தன் திருவிழா நடைபெறுகின்றமை முக்கிய விடயமாகும். சமாதானச் சூழல் நிலவுகின்ற இன்றைய நிலையில், உலகின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூர் கந்தனின் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாக் காலத்தில் பக்தர்கள் ஒழுக்கமான ஆடைகளுடன் கோயிலுக்கு வருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆண்கள் மேலாடைகளுடன் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல் ஜீன்ஸ் அணிவதும் கூடாது. பெண்கள் நீட்டமான ஆடைகளை அணிந்து ஆலயத்துக்கு வருமாறும் வேண்டப்படுகிறார்கள்.
இம்முறை நல்லூர் கந்தனின் உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் புதுப்பொலிவடைந்திருக்கிறது. ஹிந்துக்கள் மட்டுமன்றி பல மதத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

9 minute ago
11 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
20 Nov 2025