A.P.Mathan / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
கற்பிட்டி அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் சீன கம்பனியை சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது...
கற்பிட்டி அனல்மின் நிலையத்தில் 5 சீன உப கம்பனிகள் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த கம்பனியின் ஊழியர்களுக்கும் மற்றைய சீன கம்பனியின் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் கைலப்பில் முடிந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தலையில் பலத்த அடிவிழுந்த குறித்த நபர் தற்சமயம் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.jpg)


4 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago