Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 05 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர், சுதந்திரமாக இவ்வருடம் அனைவருக்கும் தீபாவளி கொண்டாடக் கிடைத்திருக்கிறது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சென்றவருடம் முதலாவது சுதந்திர தீபாவளி கொண்டாட கிடைத்தபோதிலும், பலர் அகதி முகாம்களில் இருந்தார்கள். ஆனால் இவ்வருட தீபாவளியை பெரும்பான்மையானவர்கள் சுதந்திரமாக கொண்டாடினர்.
அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பாரிய சுடரேற்றும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. 51ஆவது படையணியின் ஏற்பாட்டில் இந்த தீபமேற்றும் நிகழ்வு இன்று யாழில் 51ஆவது படையணி முகாமின் முன்னிலையில், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், 51ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 10,000இற்கும் மேற்பட்ட சிட்டி விளக்குகள் யாழ். வீதிகளின் இருமருங்கிலும் அழகாக ஒரே நேரத்தில் சுடரேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும். சுதந்திர தீபாவளி சுடரேற்றும் நிகழ்வினை படங்களில் காணலாம். Pix: Pradeep Pathirana
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago