2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

உருக்கமான வேண்டுகோள்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றும் கையெழுத்திடும் நிகழ்வொன்றும் நடைபெற்றது. 'நாம் இலங்கையர்' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, ரில்வின் சில்வா உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காணாமற்போனோரின் உறவினர்களும் கலந்து கொண்டு தங்கள் பிளளைகளையும் உறவினர்களையும் மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

காணாமற்போனோரின் உறவினர்கள் காணாமற்போனோரின் புகைப்படங்களையும் அடையாளச் சான்றுகளையும் ஏந்தியவாறு "எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாரு்கள்", "ஆண்டுக்கணக்காக காணாமற்போயிருக்கும் எங்கள் உறவினர்களை எங்களிடம் மீண்டும ஒப்படைக்க வழி செய்யுங்கள்", "எங்களுக்கான பதிலை அரசாங்கம் சொல்ல வேண்டும்" என்ற கோரிக்கைகளைக் கதறி அழுதவண்ணம் விடுத்தனர்.

"நாம் இலங்கையரின்" எங்கள் சொந்தங்களை மீட்டுத்தாருங்கள் என்ற நீண்ட பதாகையில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச உட்பட ஜேவிபியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பலரும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by:- Thaas, Hemanth, JVP Media Unit


  Comments - 0

 • rocket Tuesday, 16 November 2010 06:52 PM

  yuththam mudinthuttu, engada pillaihala vidongo...

  Reply : 0       0

  kadir Wednesday, 17 November 2010 01:03 AM

  ஜே .வி .பி வன்செயலின் போது தெற்கில் காணாமல் போன தாய் தந்தையர்களின் நிலைமையை யாரிடம் சொல்வது ?
  இவர்களை நம்புவது எப்படி ? மகிந்தவை யுத்ததிற்கு இற்றுச்சென்றவர்கள் இவர்கள் தானே .
  தமிழ் தாய் மார்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு ஏமாற போகிறார்களோ ..........................
  முதல் இவர்களின் முதலை கண்ணீரை துடையுங்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--