Super User / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்னால் இன்று பகல் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடை பெற்றது.
பிரித்தானியா சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்த விருந்த உரை ரத்துச்செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான வேல் முருகு தங்கராசாவினால் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோசங்களையும் எழுதிய பதாகைகளையும் உண்ணவிரதப்பந்தலில் கட்டியிருந்தாhகள்.
1.நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்த ஜனாதிபதியை துற்றுவதா?
2. ஐக்கியதேசியக் கட்சி ஜெயலத்தின் செயற்பாட்டைக் கண்டிக்கின்றோம்.
3.புலம் பெயர்ந்த தமிழா, உன் உறவுகளை நிம்மதியாக வாழவிடு.
4.ஜனாதிபதி அவர்களுக்கு எங்களின் ஒத்துழைப்பு.
உண்ணாவிரதம் இடம் பெற்ற பகுதியைச் சுற்றி பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருந்தன.
.jpg)
12 minute ago
17 minute ago
25 minute ago
31 minute ago
Saleem Monday, 20 December 2010 01:16 AM
ஒக்ஸ்போர்ட் யூனியன் தான் அந்தபேச்சை ரத்து செய்தது, யாழ்பாணத்தில் உண்ணா விரதம் இருப்பதும் கோசங்கள் எழுப்புவதும் எப்படி அவர்களுக்கு கேட்கும்? முகாங்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் வாழும் தாய்மாரையும் குழ்ந்தைகளையும் சற்று சிந்தித்து பாருங்கள்.
Reply : 0 0
Raman Monday, 20 December 2010 04:26 PM
ஜோக் ஒப் தி இயர் . இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக் ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
25 minute ago
31 minute ago