Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 10 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், வனாத்தவில்லுவ, கங்கேவாடிய மீனவர் கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்க்கொண்டு வருகின்றனர். சுமார் 100 குடும்பங்கள் உள்ளடங்கிய இந்த கிராமம், இரு புறங்களினாலும் களப்பினால் சூழப்பட்டுள்ளது. அத்துடன் மற்றொரு புறம் கலா ஓயா ஆறு ஓடுகிறது.
இருப்பினும் இந்த ஆற்று நீருடன் களப்பு நீர் கலப்பதால் அது குடிப்பதற்கு உகந்ததாகக் காணப்படுவதில்லை. அதனால் அங்குள்ள பெண்கள், கலா ஓயா ஆற்றின் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை வள்ளங்களில் சென்று குடிப்பதற்கான நீரை எடுத்து வருகின்றனர். இவ்வாறாக வள்ளங்களில் சென்று குடிநீர் பெற்று வரும் பொதுமக்களை படங்களில் காணலாம். இங்குள்ள மக்கள் இறால் மற்றும் களப்பு மீன்பிடி நடவடிக்கையையே வாழ்வாதார முறையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Hiran Priyankara Jayasinhe
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025