Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திற்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கெதி குளுகன் யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் போது, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உயர் ஸ்தானிகருக்கு கட்டளை தளபதி தெளிவுபடுத்தினார்.
இலங்கை இராணுவத்தினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நலன்புரி நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உயர் ஸ்தானிகர் கெதி குளுகன் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் உயர் ஸ்தானிகர் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவில் யாழ். மருதங்கேணி பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025