2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

'ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி'

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


15ஆவது ஆளுநர் மாநாட்டை முன்னிட்டு வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளிலான காண்காட்சி இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் மாநகர வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று புதன்கிழமை திறந்துவைத்தார்.

2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வட மாகாணத்தில் ஏற்பட்டிருக்கின்ற அபிவிருத்தி அடைவு மட்டங்களை சித்திரிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வட மாகாண அமைச்சின் செயலாளர்கள், யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:எஸ்.கே.பிரசாத், சுமித்தி)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .