2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் போரா தலைவர்...

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச டாவூதி போரா சமூகத்தின் தற்போதைய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷெயிட்னா முஃபாட்டல் ஷைபுடீன், இலங்கைக்கான தனது முதல் விஜயத்தினை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தார்.

தனது 103ஆவது வயதில் டாக்டர் ஷெயிட்னா மொஹமட் புர்ஹானுடீன், கடந்த ஜனவரி 17ஆம் திகதி மும்பாயில் காலமாகினார். இவரது மறைவினையடுத்து, அவரது மகன் ஷெயிட்னா முஃபாட்டல் ஷைபுடீன், போரா சமூகத்தின் 53ஆவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையினால் அடுத்த தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாக இது அமைந்தது.

மூன்று நாள் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெறுகின்றன. இவரது ஆசியினைப் பெறுவதற்காக இந்தியா, பாகிஸ்தான், குவைட் போன்ற நாடுகளிலிருக்கும் நூற்றுக்கணக்கான போரா முஸ்லிம்கள் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .