2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நேபாள தூதுக்குழு கிளிநொச்சியில்...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

நேபாள நாட்டின் சமாதான மீள்குடியேற்ற அமைச்சின் தூதுக்குழுவொன்று கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (3) விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. 

இந்தக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கால நிலைமைகள் மற்றும் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தன்னிடம் கேட்டறிந்து கொண்டதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

இக்குழுவில் பினொட் கே.சி. பாஸுடேல்,  ரீஹம் லக்ஷ;மி டட்டா, ஹலுனி கோபால்ராஜ்ரிமில்சினா கங்கா, பஹதூர் ஹரீல் , ரமேஸ் டஹால் , ரகுநாததப்பா , சபனாகுமாரி பத்திராய் ஆகியோரே அடங்குகின்றனர்.

இந்த குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மேலதிக மாவட்;டச் செயலர் ரூபினி வரதலிங்கத்தினையும்  சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .