2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

48 அணிகளுக்கு ஃபீபா தலைவர் ஆதரவு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 08 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், 3 அணிகளைக் கொண்ட 16 குழுக்களாக, 48 நாடுகள் பங்குபற்றும் தொடருக்கு, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பான்டினோ, தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

உலகக் கிண்ணத்தை, 32 நாடுகள் பங்குபற்றும் தொடராகவே நடத்துவதற்கு, ஃபீபா சபையின் உறுப்பினர்கள், பரிந்துரையைப பெற்றுள்ளனர். ஆனால், மேலும் 16 அணிகளைச் சேர்க்க விரும்பும் இன்பான்டினோ, அந்த 48 அணிகளும், தலா 3 அணிகளைக் கொண்ட 16 குழுக்களாக இருக்கலாமெனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமாயின், 2026ஆம் ஆண்டிலிருந்து, உலகக் கிண்ணப் போட்டிகளில் 48 நாடுகள் பங்குபற்றவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--