2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அன்டி மறே, ரஃபேல் நடால் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 17 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள பிரித்தானியாவின் அன்டி மறே, தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால்ஆகியோர் தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பின் உலகத் தொடர் இறுதிப்போட்டிகளை வெற்றியுடன் தொடக்கியுள்ளனர்.

அன்டி மறே, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் ஏழாம் இடத்திலுள்ள ஸ்பெயினின் டேவிட் பெரரைத் தோற்கடித்தும், தரவரிசையில் ஒன்பதாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்கு முன்னேறிய நடால், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இந்த வருட பிரெஞ் பகிரங்க சம்பியனான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்காவை தோற்கடித்துமே தத்தமது வெற்றிகளைப் பெற்றிருந்தனர்.

இன்று இடம்பெறவுள்ள தனது அடுத்த போட்டியில் அன்டி மறே, ரஃபேல் நடாலைச் சந்திக்கவுள்ளார். இன்றைய போட்டியில் மறே வெற்றி பெறும் பட்சத்தில், தரவரிசையில் இரண்டாமிடத்தில் இந்த வருடத்தை முடித்துக் கொண்டு, இந்த அடைவு மட்டத்தை தான் வாழ்நாளில் முதன்முறையாக மறே பெற்றுக்கொள்வார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .