2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ஆர்சனல் தோல்வி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 14 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய எஃப்.ஏ கிண்ண சம்பியன்களான ஆர்சனல், இம்முறை காலிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்று, இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

2-1 என்ற கோல்கணக்கில் ஆர்சனலை தோற்கடித்த வட்போர்ட், அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இப்போட்டியில், வட்போர்ட் சார்பாக, போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஒடியோன் இக்கலோவும் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் அட்லெனி குவாடியோரவும் கோல்களைப் பெற்றிருந்தனர். ஆர்சனல் சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 88ஆவது நிமிடத்தில் டனி வெல்பக் பெற்றிருந்தார்.

அடுத்து, மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன்காரணமாக, அரையிறுதிக்கு தெரிவாகும் அணியை தேர்ந்தெடுப்பதற்கான இப்போட்டி மீண்டும் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 83ஆவது நிமிடத்தில் அந்தோணி மார்ஷியல் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .