2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் ரியோ பெர்டினன்டுக்கு உபாதை

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் ரியோ பெர்டினன்ட் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். 31 வயதான பெர்டினன்ட் இன்றைய தினம் நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

மருத்துவர்கள் இவருக்கு தேவையான வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குகொள்ளக் கூடிய சாத்தியமில்லை என இங்கிலாந்து கால்பந்தாட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு ஸ்டீவன் கெரார்ட் தலைமை தாங்குவார் என நம்பப்படுகின்றது.

ஏற்கனவே ஏற்பட்ட உபாதை காரணமாக பெர்டினன்ட் கடந்த பருவ காலத்தின் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .