2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்தில் நாணயச் சுழற்சி நீக்கப்படுகிறது?

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 25 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் உள்ளூர்ப் போட்டிகளான பிராந்தியப் போட்டிகளின் பிரிவு 2இல், நாணயச் சுழற்சி நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பான முன்மொழிவு ஆராயப்பட்டு வருவதையடுத்தே, இந்த வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையடுத்தே, இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில், இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அடுத்தாண்டு முதல், பிரிவு 2 போட்டிகளில், நாணயச் சுழற்சிகள் இடம்பெறாது.

அவ்வாறான நடைமுறை ஏற்படுமாயின், குறித்த மைதானத்துக்கு விஜயம் செய்யும் அணிக்கு, முதலில் துடுப்பெடுத்தாடுவதா, இல்லை களத்தடுப்பில் ஈடுபடுவதா என்ற தெரிவு வழங்கப்படும்.

மைதானங்களுக்குச் சொந்தமான அணிகளுக்கெதிராக விளையாடும் போது, விஜயம் செய்யும் அணிகள், நாணயச் சுழற்சியால் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. தங்களது பந்துவீச்சுக்குச் சாதமாக அவ்வாடுகளங்களை, அவ்வணிகள் தயாரிப்பதே அதன் காரணமாகும்.

பிரிவு 2 போட்டிகளில் நாணயச் சுழற்சி இல்லாது செய்யப்பட்டாலும், பிரிவு 1 போட்டிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடர்களிலும், நாணயச் சுழற்சி தொடர்ந்தும் காணப்படுமென அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X