2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இந்தியக் குழாம்கள் அறிவிக்கப்பட்டன

Shanmugan Murugavel   / 2016 மே 23 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அடுத்த தொடர்களான மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடர், சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள், இருபதுக்கு-20 சர்வதேசத் தொடர்களுக்கான இந்தியக் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிம்பாப்வே தொடர் ஜூனிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடர் ஜூலை - ஓகஸ்டிலும் இடம்பெறவுள்ளன. சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில், முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அனுபவம் குறைந்த அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், டெஸ்ட் தொடருக்கான குழாமில், வழக்கமான அனுபவமிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அக்குழாமில் உப தலைவராக அஜின்கியா ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒ.நா.ச.போ., இ-20 ச.போ. குழாம்:

மகேந்திரசிங் டோணி (தலைவர்), லோகேஷ் ராகுல், பயாஸ் பஸல், மனிஷ் பாண்டே, கருண் நாயர், அம்பத்தி ராயுடு, றிஷி தவான், அக்ஸர் பட்டேல், ஜெயந்த் யாதவ், தவால் குல்கர்ணி, ஜஸ்பிறிட் பும்ரா, பரிந்தர் ஸ்ரான், மந்தீப் சிங், கேதார் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், யுஸ்வேந்திர சஹால்.

டெஸ்ட் குழாம்:

விராத் கோலி (தலைவர்), அஜின்கியா ரஹானே, முரளி விஜய், ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், செற்றேஸ்வர் புஜாரா, றோகித் ஷர்மா, ரிதிமான் சஹா, இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, ரவீந்திர ஜடேஜா,
இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஸ்டுவேர்ட் பின்னி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .