Shanmugan Murugavel / 2015 நவம்பர் 15 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், மழை காரணமாகக் கைவிடப்பட்டது.
பெங்களூரில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், முதல்நாளில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இரண்டாம் நாளில் தனது ஆதிக்கத்தைத் தொடர எதிர்பார்த்தபோதே, மழை குறுக்கிட்டிருந்தது.
கடுமையான மழை காணப்பட்டிருக்காத போதிலும், இடைவிடாது பெய்த மழை காரணமாக, இரண்டாம் நாளைக் கைவிடும் முடிவு, பிற்பகல் 2 மணிக்கு எடுக்கப்பட்டது.
ஏபி டி வில்லியர்ஸின் 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி சார்பாக ஏபி டி வில்லியர்ஸ (85), டீல் எல்கர் (38) மாத்திரமே பிரகாசிக்க, அவ்வணியால் 214 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்திருந்தது.
இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
பதிலளித்தாடிவரும் இந்திய அணி, முதல்நாள் முடிவில் விக்கெட் எதனையும் இழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஷீகர் தவான் 45, முரளி விஜய் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago