2021 மே 08, சனிக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இன்று வியாழக்கிழமை (21), இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு அன்டிகுவாவில் ஆரம்பிக்கின்றது.

தற்போதைய இருபதுக்கு-20 சம்பியன்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணி காணப்பட்டாலும், இந்தத் தொடரை இந்திய அணி இலகுவாகக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர், பங்களாதேஷ், சிம்பாப்வே தவிர்ந்த எந்தவொரு அணிக்கெதிராக டெஸ்ட் தொடரையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போதாதென்று, 2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியினை நோக்கினால், கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், டுவைன் பிராவோ, கீரன் பொலார்ட் போன்ற முக்கிய வீரர்கள் டெஸ்ட் போட்டிகள் பக்கம் தலைவைத்துப்படுப்பதில்லை என்பதோடு, வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் டெய்லர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதோடு, மற்றைய அனுபவ வேகப்பந்துவீச்சாளரான கேமார் றோச் அணியிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், பலவீனமாக பந்துவீச்சு வரிசையுடனேயே மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது.

மறுபக்கம், இந்திய அணியின் பயிற்சியாளராக, புதிதாக பதவியேற்றுள்ள அணில் கும்ளேயின் கீழ் முதலாவது தொடரில் களமிறங்கும் இந்திய அணிக்கு அணித் தேர்வே தலையிடியை ஏற்படுத்துகிறது. எந்த சகலதுறை வீரரைச் சேர்ப்பது, பந்துவீச்சு வரிசையை எவ்வாறு அமைப்பது என்பதே இந்தியாவுக்கான பிரதான சிக்கல்களாக காணப்படுகின்றன.  

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: ஷீகர் தவான், முரளி விஜய், சட்டேஸ்வர் புஜாரா, விராத் கோலி, அஜிங்கியா ரகானே, ரித்திமான் சகா, ஸ்டூவேர்ட் பின்னி, இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, மொஹம்மட் சமி, இஷாந் ஷர்மா

எதிர்பார்க்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணி: ராஜேந்திர சந்திரிகா, கிரேய்க் பிராத்வெயிட், லியோன் ஜோன்சன், டரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளக்வூட், ஷேன் டௌரிச், ஜேஸன் ஹோல்டர், ஷனோன் கப்ரியல், தேவேந்திர பிஷூ, மிக்கல் கம்மின்ஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X