2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு 3 புதிய உறுப்பினர்கள் நியமனம்

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு 3 புதிய உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க  நியமித்திருப்பதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசங்க செனவிரட்ன, கலிங்க இந்திரதிஸ்ஸ, கலிங்க  பிரபாத் பொன்சேகா ஆகியோரே நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உறுப்பினர்கள் ஆவார் எனவும் அந்த அமைச்சு வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் டி.எஸ்.டி.சில்வா தலைவராகவும், நிசாந்த ரனதுங்க செயலாளராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் மூன்றாவது ஊழல் நிறைந்த நிறுவனமாக இலங்கை  கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.ரத்னாயக்க அண்மையில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--