2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சம்பியனானது ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக்கின் இவ்வாண்டுக்கான தொடரில் ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் சம்பியனானது. ட்ரினிடாட்டில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கயானா அமெஸன் வொரியர்ஸ் அணியை வென்றதையடுத்தே  ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணி சம்பியனாகியிருந்தது.

குறித்த போட்டியில் துடுப்பெடுத்தாடிய கயானா அமெஸன் வொரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், லுக் றொங்கி 44 (35), ஜேஸன் மொஹமட் 24 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கரி பியரி 3, டுவைன் பிராவோ 2, அலி கான், பவாட் அஹமட், சுனில் நரைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணி, 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து 15 பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட்டுகளால் வென்று சம்பியனாகியது. துடுப்பாட்டத்தில், கொலின் மன்றோ ஆட்டமிழக்காமல் 68 (39), பிரெண்டன் மக்கலம் 39 (24), தினேஷ் ராம்டீன் 24 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிறிஸ் கிறீன், றொமாரியோ ஷெபர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக கரி பியரி தெரிவானதோடு, தொடரின் நாயகனாக கொலின் மன்றோ தெரிவாகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X