2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சிம்பாவேயில் இடம்பெறவுள்ள முக்கோண தொடருக்கு திலஹரட்ன டில்சான் தலைவராக நியமனம்.

Super User   / 2010 மே 22 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 28 ஆம் திகதி சிம்பாவேயில் ஆரம்பமாகவுள்ள முக்கோண ஒரு நாள் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திலஹரட்ன டில்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, இத்தொடரில்  சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார,மஹெல ஜயவர்த்தன,சனத் ஜயசூரிய ,முத்தையா முரளிதரன், மற்றும் லசித் மலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இருபத்தேழு வயதான சகல துறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ்க்கு முதன் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவர்க்ற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிம்பாவேயில் இடம்பெறும் இப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக உப்புல் தரங்க மற்றும் சாமர சில்வா ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொடரில் உபதலைவராக சகலதுறை ஆட்டக்காரர் அஞ்ஜேலே மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • M.Frank Monday, 24 May 2010 04:24 PM

    இது ஒரு புதிய முயற்சி. இதை நான் வரவேற்கின்றேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .