Shanmugan Murugavel / 2016 ஜூலை 25 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸில் வெற்றி பெற்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், இந்தப் பருவ காலத்தில், முதன்முறையாக சம்பியன்ஷிப் புள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார்
குறித்த பந்தயத்தின் ஆரம்பத்தில், சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கை முந்திய தருணம் முதல், பந்தயத்தை கட்டுப்படுத்திய உலக சம்பியனான ஹமில்டன், சம்பியன்ஷிப்பில், தற்போது, அவரை விட ஆறு புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
பந்தயத்தின் நடுப்பகுதியில், ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் ரிக்கார்டோ, மெர்சிடிஸ் அணிக்கு சவாலை வழங்கியபோதும், இறுதியில் பின்தங்கிய அவர், பெராரி அணியின் ஜேர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டலிடம் பலத்த போட்டியினை எதிர்கொண்டே மூன்றாமிடத்தைப் பெற்றார்.
சாதனை ரீதியாக, 21 பந்தயத்தை கொண்டுள்ள இந்த பருவகாலத்தில், இன்னும் 10 பந்தயங்கள் மீதமுள்ள நிலையில், இந்த வாரயிறுதியில், அடுத்த பந்தயமான ஜேர்மன் கிரான்ட் பிறிக்ஸ் இடம்பெறவுள்ளது.
2 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025