Shanmugan Murugavel / 2016 மார்ச் 16 , மு.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்றுக்குள் முதற்தடவையாக இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழக அணியான மன்செஸ்டர் சிற்றி நுழைந்துள்ளது.
மன்செஸ்டர் சிற்றி, டைனமோ கீவ் அணிகளுக்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் போட்டி சமநிலையில் முடிவடைந்தபோதும், இரண்டு அணிகளுக்கிடையிலான முதல் சுற்றுப் போட்டியில், 3-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றமை காரணமாக, கோல் எண்ணிக்கையடிப்படையில் அவ்வணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதேவேளை, அத்லெட்டிகோ மட்ரிட், பிஎஸ்வி ஐந்தோவன் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியின் முடிவிலும் இரண்டு அணிகளும் கோல்களைப் பெற்றிருக்காத நிலையில், காலிறுதிக்குச் செல்லும் அணியை தீர்மானிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட பெனால்டியில், 8-7 என்ற ரீதியில் அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றி பெற்றது.
50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago