2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சௌதாம்டன் அலுவலரும் சிக்கினார்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய கால்பந்தாட்டத்தை உலுக்கியுள்ள சிறுவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில், சௌதாம்டன் அணியின் முன்னாள் இளைஞர் அபிவிருத்தி அதிகாரியும் புதிதாகப் பெயரிடப்பட்டுள்ளார். பொப் ஹிக்கின்ஸ் என்ற குறித்த அலுவலர், தங்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக, ஆறு வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1970களிலும் 1980களிலும், கால்பந்தாட்டத்தைப் பயில முயன்ற சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பில், தொடர்ச்சியாகத் தகவல்கள் வெளியாகும் நிலையிலேயே, 1980களில், சிறுவர்களை கால்பந்தாட்டத்தில் பயிற்றுவதற்குப் பெயர்போன சௌதாம்டன் அணியும் அக்குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது.

இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக, பொலிஸாருடன் இணைந்து செயற்பட அர்ப்பணிப்புடன் உள்ளதாக, சௌதாம்டன் உறுதியளித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--