2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சீன பகிரங்க தொடரில் காலிறுதியில் நடால்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்கில் இடம்பெற்று வரும் சீன பகிரங்க டென்னிஸ் தொடரைக் கைப்பற்றுபவர்களில் மூன்றாமிடத்தில் காணப்படும் ஸ்பெயினின் ரஃபேல் நடால், தொடரின் காலிறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

29 வயதான நடால், தனது இரண்டாவது சுற்றுப்போட்டியில் கனடாவின் வசேக் பொஸ்பிசிலை 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தே நடால், காலிறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள காலிறுதிப்போட்டியில், நடால், அமெரிக்காவின் ஜக் சொக்கை சந்திக்கவுள்ளார். ஜக் சொக், தனது இரண்டாவது சுற்றுப்போட்டியில் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் அன்ரூஸ் ஹெய்ரர் மோரரை வெற்றி அவர் காலிறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இதேவேளை தொடரைக் கைப்பற்றுபவர்களில் இரண்டாமிடத்தில் காணப்பட்ட செக் குடியரசின் தோமஸ் பேர்டிச், 6-4 6-4 என்ற செட் கணக்கில் தனது முதலாவது சுற்றிலேயே உருகுவேயின் பப்லோ குவேவஸ்சிடம் தோல்வியடைந்திருந்தார்.

பெண்கள் பிரிவில் தொடரைக் கைப்பற்றுபவர்களில் நான்காம் இடத்தில் காணப்பட்ட போலந்து வீராங்கனையான அக்னியன்ஸ்கா ரட்வன்ஸ்கா காலிறுதிக்கு முன்னேறியபோதும், தொடரைக் கைப்பற்றுபவர்களில் எட்டாம் இடத்தில் காணப்பட்ட டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .