2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

செரினாவின் 22ஆவதும் 6ஆவதும்

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், விம்பிள்டனின் பெண்கள் ஒற்றையர் போட்டிகளிலும் இரட்டையர் போட்டிகளிலும் ஒரே இரவில் வென்று, தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டார்.

செரினா, இதற்கு முன்னர் 21 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தார். ஆனால், 22ஆவது பட்டத்தை வென்று, பகிரங்க யுகத்தில் அதிக பட்டங்களை வென்ற ஸ்டெபி கிராப்-இன் சாதனையைச் சமன் செய்யும் இரண்டு வாய்ப்புகளை, இவ்வாண்டில் தவறவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, ஒற்றையர் போட்டிகளில் ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரை எதிர்கொண்ட செரினா, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, சம்பியன் பட்டத்தை வென்றதோடு, கிராப்-இன் சாதனையைச் சமப்படுத்தியிருந்தார்.

வெற்றியின் பின்னர் புன்னகைத்தவாறு கருத்துத் தெரிவித்த செரினா, 22 கிரான்ட் ஸ்லாம் பட்டங்கள் என்ற கிரா‡ப்-இன் சாதனையை எண்ணாமல் இருந்திருக்க முடியவில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாண்டில் இரண்டு முறை முயன்றதாகவும், ஆனால் மிகச்சிறப்பான இரண்டு எதிரணி வீராங்கனைகளால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, வெறும் இரண்டே மணித்தியாலங்களில் பெண்கள் இரட்டையர் போட்டியில், தனது மூத்த சகோதரியான வீனஸ{டன் இணைந்து, ஹங்கேரியின் திமியா பபோஸ், கஸக்ஸ்தானின் யாரோஸ்லாவா ஸ்வேடோவா ஜோடியை எதிர்கொண்டார். அதில், 6-3, 6-4 என்ற செட் கணக்கில், இலகுவான வெற்றியை வில்லியம்ஸ் சகோதரிகள் பெற்றனர்.

இது, இவர்களிருவரும் இணைந்து பெறும் 6ஆவது இரட்டையர் கிரான்ட் ஸ்லாம் பட்டமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .