2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சிற்றியை வென்றது யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், டொட்டேன்ஹாம், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, நியூகாசில், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றது. இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மார்க்கஸ் ரஷ்போர்ட் கோலினைப் பெற்றிருந்தார். இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், 51 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றியை விட ஒரு புள்ளியே மன்செஸ்டர் யுனைட்டெட் குறைவாகப் பெற்றுள்ளது.

மறுகணம், லிவர்பூல், சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-3 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் தோல்வியடைந்தது. லிவர்பூல் சார்பாக, போட்டியின் 17ஆவது, 22ஆவது நிமிடங்களில் முறையே, பிலிப்பி கோத்தின்ஹோ, டானியல் ஸ்டரிட்ஜ் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.

டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பேர், ஏ.எஃப்.சி பௌர்ண்மௌத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பேர் வெற்றி பெற்றது.இப்போட்டியின் முதலாவது, 16ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்ற ஹரி கேன், இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் இப்பருவ காலத்தில் முதலாமவராக 21 கோல்களைப் பெற்றுள்ளார். தவிர, இப்போட்டியின் வெற்றியுடன் 61 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பேர், முதலிடத்திலுள்ள லெய்செஸ்டரை விட ஐந்து புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

நியூகாசில், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .