2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஜேர்மனியை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகளில், கடந்த சனிக்கிழமை (26), இங்கிலாந்துக்கும் தற்போதைய உலக சம்பியன்களான ஜேர்மனிக்குமிடையே இடம்பெற்ற போட்டியில், இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து அணி சுதாகரித்துக் கொண்டு ஜேர்மனியை வீழ்த்தியது.

இப்போட்டியின் 43ஆவது, 57ஆவது நிமிடங்களில் முறையே ஜேர்மனியின் டொனி குரூஸ், மரியோ கோமிஸ் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து சார்பாக, போட்டியின் 61ஆவது, 74ஆவது, 91ஆவது நிமிடங்களில் முறையே ஹரி கேன், ஜேமி வர்டி, எரிக் டையர் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டியானது சிநேகபூர்வமான போட்டியாயினும் இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றியானது, பிரான்ஸில் இவ்வருடம் இடம்பெறவுள்ள யூரோ 2016 போட்டிகளுக்காக திட்டங்களை வகுத்துள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளருக்கும் அவ்வணிக்கும் ஊக்கத்தை வழங்கியிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .