Shanmugan Murugavel / 2016 மே 29 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகனில் இடம்பெற்ற டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், இவ்வருடத்தின் தனது சிறந்த நேரமான 9.88 செக்கன்களில் ஓடிய ஜஸ்டின் கட்லின் வெற்றி பெற்றார்.
இப்போட்டியில், 9.94 செக்கன்களில் ஓடிய ஜமைக்காவின் அஸாவா பவல், 9.98 செக்கன்களில் ஓடிய சக அமெரிக்க வீரரான டைஸன் கே ஆகியோரை முந்தியே இப்பந்தயத்தை கட்லின் வென்றிருந்தார். இதேவேளை, இவ்வருடத்தின் அதிவேகமான வீரரான, கட்டாருக்காக போட்டிகளைப் பங்கேற்கும் பெமி ஒகுநொடே, 10.02 செக்கன்களில் ஓடி ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தார்.
34 வயதான முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான கட்லின், இம்மாத ஆரம்பத்தில் ஷங்காயில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் தரவரிசையில் முன்னிலையில் உள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025