2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

டுவர் டி பிரான்ஸ்: 16ஆவது கட்டத்தை வென்றார் சாகன்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டத் தொடரின் 16ஆவது கட்டத்தை, உலகச் சம்பியனான ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த பீற்றர் சாகன் வென்றுள்ளார். நோர்வேயின் அலெக்ஸான்டர் கிறிஸ்தோபை வெற்றிகொண்டே, இந்த வெற்றியை அவர் பெற்றுக் கொண்டார்.

மொய்ரன்ஸ்-என்-மொன்டாக்னேவில் ஆரம்பித்து 209 கிலோமீற்றர்கள் இடம்பெற்ற இந்தக் கட்டம், 21 கட்டங்களைக் கொண்ட இப்போட்டியின் 16ஆவது கட்டமாகும்.
போட்டித் தூரத்தைக் கடந்ததும், கிறிஸ்தோபே வெற்றியடைந்ததாகக் கொண்டாடிய போதிலும், பீற்றர் சாகனே வென்றமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வெற்றியைப் பெற்றதன் மூலம், இதுவரை இடம்பெற்றுள்ள 16 கட்டங்களில் 3 கட்டங்களில், பீற்றர் சாகன் வெற்றிபெற்றுள்ளார். பெரிய பிரித்தானியாவின் மார்க் கவென்டிஷ், 4 கட்டங்களில் வென்றுள்ளார்.
எனினும், புள்ளிகளின் அடிப்படையில் மார்க் கவென்டிஷூக்கும் பீற்றர் சாகனுக்குமிடையில் 114 புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகிறது. எனவே, 21 கட்டங்களின் முடிவில், கவென்டிஷூக்கே சம்பியன் பட்டம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .