2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்க வீராங்கனை மீண்டும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதி

Super User   / 2010 ஜூலை 06 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க ஓட்ட வீராங்கனை கஸ்டர் செமன்யா மீண்டும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனங்களின் சங்கம் (ஐ.ஏ.ஏ.எவ்.) அனுமதி வழங்கியுள்ளது.

19 வயதான செமன்யா 800 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனாக விளங்குகிறார். எனினும் அவர் ஆணா பெண்ணா என்பது குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டதால் அவர் மீது பாலின சோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் கடந்த 11 மாதங்களாக அவர் போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை.

 

இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, அவர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு விதிக்கப்பட்ட  சகல தடைகளும் உடனடியாக நீக்கப்படுவதாக ஐ.ஏ.ஏ.எவ். நேற்று அறிவித்தது.

இது தொடர்பான மருத்துவ விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் எனவும் ஐ.ஏ.ஏ.எவ். அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக செமன்யா கூறியுள்ளார்.

அவர்  அடுத்ததாக இம்மாத இறுதியில் கனடாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எதிர்வரும் பொதுநலவாயப் போட்டிகளே அவரின் பிரதான இலக்காக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--