2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தலைவராக இருப்பதற்கு தயாராகியிருக்கவில்லை: மத்தியூஸ்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 10 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகளின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க, தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்த பின், இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தலைவர் பதவியை ஏற்பதற்கு தான் மனதளவில் தயாராகியிருக்கவில்லை என்று தற்போது அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அஞ்செலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை கிரிக்கெட் சபையால், தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கேட்கப்பட்டபோது அதை நிராகரிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை, தலைமைப் பதவியை ஏற்குமாறு வினவியபோது, தலைமைப் பதவியை ஏற்பதற்கு உடனடியாக தயாராக இருந்தீர்களாக என வினவப்பட்டதுக்கு எல்லை எனப் பதிலளித்த மத்தியூஸ், தான் சில ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளதாகவும் தற்போது இது சவால் எனவும் தெரிவித்துள்ளார்.

உலக இருபதுக்கு-20 தொடருக்காக லசித் மலிங்கவும் தேர்வாளர்களும் பல ஆண்டுகளாக பணியாற்றியதாகவும் தற்போது இது முற்றிலும் வேறுபட்ட நிலைமை எனத் தெரிவித்த மத்தியூஸ், தான் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் என்னிடமுள்ள அணியிலிருந்து சிறந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .