2021 மே 08, சனிக்கிழமை

நடாலுக்குச் சவாலளித்த பந்து பொறுக்கியவர்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சீன பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ரபேல் நடால், அவருக்குப் பந்து பொறுக்கிய ஒருவரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டார்.

230ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள வு டி, முன்னைய காலங்களில் ரபேல் நடால் விளையாடிய போது, பந்தை எடுத்துக் கொடுக்கும் சிறுவனாக இருந்திருந்தார்.

இந்நிலையில், ரபேல் நடால், வு டி மோதிய போட்டியில், 4-6, 4-6 என்ற செட் கணக்கில் வு டி தோல்வியடைந்த போதிலும், ரபேல் நடாலுக்குக் கடுமையான சவாலை வழங்கியிருந்தார்.

ஏனைய போட்டிகளில், உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், இத்தாலியின் சிமோன் பொலெல்லியை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

பெண்கள் போட்டிகளில், அண்மையில் ஐக்கிய அமெரிக்க சம்பியன் பட்டம் வென்ற பிளாவியா பென்னெட்டா, 3-6, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலினின் தெலியானா பெரெய்ராவை வெற்றிகொண்டார்.

மற்றொரு போட்டியில், வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்ட அனா இவானோவிச், 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X