2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நடாலின் பயிற்றுவிப்பு அணியில் மோயா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலின் பயிற்றுவிப்பு அணியில், முன்னாள் முதல்நிலை வீரரான கார்லொஸ் மோயா இணைந்துள்ளார். நடாலின் நீண்டகாலப் பயிற்றுநரான அவரது மாமா டொனி நடாலுடன் இணைந்து, கார்லொஸ் மோயா, பயிற்றுவிப்பில் ஈடுபடவுள்ளார்.

இதுவரையில் கனடாவின் மிலோஸ் றாவோனிஸுக்குப் பயிற்றுவிப்பு, அவரை உலகின் 3ஆம் நிலை வீரராக உயர்த்திய மோயா, அண்மையிலேயே தனது பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். நடாலின் நண்பரான மோயா, பயிற்றுவிப்புப் பணிகளில் உடனடியாகவே இணைந்து கொள்ளவுள்ளதாக, நடால் வெளியிட்ட ஊடகக் குறிப்புத் தெரிவித்தது.

இதுவரை 14 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், அண்மைக்கால உபாதைகளின் விளைவாக, தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .