2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

'நானும் ஹமில்டனும் சிறந்த நண்பர்கள் அல்லர்'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேர்சிடீஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க், பெரிய பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் இருவருக்குமிடையிலான போட்டித் தன்மை குறித்து அனைவரும் அறிந்த நிலையில், தானும் அவரும் சிறந்த நண்பர்கள் அல்லர் என, றொஸ்பேர்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.

போர்மியூலா 1 காரோட்டப் போட்டிகளில் இவ்வாண்டுக்கான போட்டிகளின் ஆரம்பத்தில், றொஸ்பேர்க்குக்கும் ஹமில்டனுக்குமிடையில் 43 புள்ளிகள் வித்தியாசம் காணப்பட்டன. ஆனால், இறுதி 5 போட்டிகளில் நான்கில் வென்றுள்ள ஹமில்டன், புள்ளிகள் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்துள்ளார். அத்தோடு, அண்மைக்கால போட்டிகளில், இருவருக்குமிடையிலான முரண்பாடுகளும் தெளிவாகப் புலப்பட ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், "நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். லூயிஸூடனான மோதல், உயிர்ப்புடன் இருக்கிறது" என்றார். லூயிஸ் ஹமில்டனை தனது "இனிப்பான" எதிராளிகளில் ஒருவர் எனக் குறிப்பிட்ட றொஸ்பேர்க், அவரை வென்று பெறும் வெற்றி, மிகவும் தித்திப்பாக இருக்குமென்றார். "அவர் உலகச் சம்பியன் என்பதால், அவரை வெற்றிகொள்வதென்பது, மிகப்பெரிய திருப்தியை வழங்கும்" எனத் தெரிவித்த றொஸ்பேர்க், லூயிஸை வெறுக்கிறாரா எனக் கேட்டபோது, "அவர் மீது பாரிய மரியாதை உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், நாமிருவரும் சிறந்த நண்பர்கள் அல்லர்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .