Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 28 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஒருநாள் போட்டியொன்றில், பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
பேர்மிங்காமில் நேற்று (27) இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 102 (140), இம்ருல் கைஸ் 61 (91), முஷ்பிக்கூர் ரஹீம் 46 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான் 4, ஹஸன் அலி, ஷடாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 342 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 49.3 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷொய்ப் மலிக் 72 (66), பாஹிம் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 64 (30), மொஹமட் ஹபீஸ் 49 (62), இமாட் வஸீம் 45 (50), அஹமட் ஷெஷாட் 44 (40) ஓட்டங்களைப் பெற்றனர்.
1 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025