2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பங்களாதேஷுக்கெதிராக அவுஸ்திரேலியாவில் மாற்றங்கள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணிக்கெதிரான உலக இருபதுக்கு-20 போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணியிலிருந்து, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளும் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கெதிரான போட்டியில், அவுஸ்திரேலிய இருபதுக்கு-20 அணியின் முன்னாள் தலைவரும் உலக இருபதுக்கு-20 துடுப்பாட்டத் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளவருமான ஆரொன் பின்ச் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டிருந்தார். அப்போட்டியில் கவாஜா, 27 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றதோடு, ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பயிற்றுநர் டெரன் லீமன், 'கவாஜா சிறப்பாக விளையாடினார். அவர் சிறப்பாக விளையாடினார். ரண் அவுட் முறையில் அவர் ஆட்டமிழந்ததையென்பது, துரதிர்ஷ்டவசமானது அன்று. ஓட்டங்கள் தேவையில்லையென அவரால் கூற முடியும். விக்கெட்டுகளுக்கிடையில் ஓடுவதில் அவர் சிறப்படைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

'அவர் அழகாக விளையாடினார். ஆனால், நிலைமையைப் பொறுத்துத் தான் முடிவெடுக்கப்படும். பங்களாதேஷுக்கெதிராக பெங்களூரில் விளையாட வேண்டும். அப்போட்டிக்குச் சிறந்த அணி எதுவென்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அணியிலிருந்து நீக்கப்படுவது குறித்த தகவல், மைதானத்தை வந்தடைந்த பின்னரே பின்ச்சுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்த டெரன் லீமன், அதை அவர் எடுத்துக் கொண்ட விதம் குறித்து, மிக உயர்வாகப் பாராட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X