2021 மார்ச் 01, திங்கட்கிழமை

'பந்துவீச்சாளர்களில் நம்பிக்கையுண்டு': 'எதிர்காலத்துக்காக விளையாடுகிறேன்'

Shanmugan Murugavel   / 2016 மே 26 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷ்மந்த சமீரவின் இழப்பின் பின்னர் தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை, நாளை ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசுமென்ற நம்பிக்கை காணப்படுவதாக, இலங்கையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநர் சம்பக்க ராமநாயக்க தெரிவித்துள்ளார். சமீரவுக்குப் பதிலாக, சுரங்க லக்மால் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் திறமையில், ராமநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

'எங்களது அணியில், சமீர தான் அதிவேகப் பந்துவீச்சாளர். ஆகவே அவரது இழப்பு, எங்களுக்குப் பெரியது தான். ஆனால் இங்கு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளங்கள் உதவுகின்றன. எனவே, ஏனையோரும் சிறப்பாகப் பந்துவீசுவர். ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசுவர். வலைப்பயிற்சியில், சுரங்க லக்மால் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். அவர் அனுபவமான வீரர், எனவே, சமீரவின் இடத்தை அவரால் நிரப்ப முடியும்" எனத் தெரிவித்தார். அத்தோடு, முதலாவது போட்டியில், நுவான் பிரதீப், ஷமின்ட எரங்க ஆகியோரின் பந்துவீச்சிலும் திருப்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கிலாந்து அணியின் மூன்றாமிலக்கத் துடுப்பாட்ட வீரரான நிக் கொம்ப்டன், தனது கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் போட்டித் தொடரில் விளையாடுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 30.16 என்ற துடுப்பாட்டச் சராசரியையே கொண்டுள்ளதோடு, அவரது இறுதி 6 இனிங்ஸ்களில், 15, 26, 0, 19, 6, 0 என ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை, இரண்டு கரங்களாலும் ஏந்தவில்லை எனத் தெரிவித்த அவர், அவரது எதிர்காலத்துக்காக விளையாடுவதாக ஏற்றுக் கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .