2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போர்த்துகல் 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில்  போர்த்துகல் 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.

முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல், இரண்டாவது பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து 6 கோல்கள் என மொத்தம் 7 கோல்கள் அடித்து  போர்த்துகல் அணி கோல் மழை பொழிந்தது.

இதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஒரு கோல் மட்டுமே போர்த்துகல் அடித்திருந்தது. எனினும், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் வெளுத்து வாங்கியது. 56, 59, 60,
81, 87, 89 ஆவது நிமிடங்களில் கோல் அடித்து கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

ஒருமுனையில் போர்த்துகல் வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க மறுமுனையில் வடகொரிய வீரர்கள் கோல் அடிக்க முடியாமலும், போர்த்துகல் அணியின் கோல் மழையை தடுக்க முடியாமலும் தடுமாறினர்.

இறுதியில் போர்த்துகல் அணி 7 கோல்களை போட்டு 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக இந்த ஆட்டம் அமைந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .