Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியின் மூன்றாவது போட்டி தொடர்பில் பெரிதளவிலான சந்தேகமில்லை என, சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.
அந்தப் போட்டியில், போட்டி நிர்ணயம் இடம்பெற்றிருக்கலாமெனவும், அது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணை நடாத்தப்படுவதாகவும், இங்கிலாந்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
துடுப்பாட்டத்துச் சாதகமான அந்த ஆடுகளத்தில், 208 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில், 3 ரண் அவுட்களும் இடம்பெற்றிருந்தன. அத்தோடு, களத்தடுப்பும் மோசமானதாக இருந்தது.
எனினும், அதிகளவிலான ரண் அவுட்கள், அவ்வப்போது இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், தங்களைத் தேடிவரும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்கள், அதிகளவிலான முறைப்பாடுகளை மேற்கொள்கின்ற நிலையில், அப்போட்டி மீது, சந்தேகம் கிடையாது எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸஸூம், இச்செய்தியை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago