2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'பாகிஸ்தானை இந்தியா தவிர்க்க முடியாது'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் லீக் தொடரில், இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாட வேண்டியிருக்கும் என, பாகிஸதான் சுப்பர் லீக்கின் தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கெதிராக, கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என இந்தியா தெரிவித்து வரும் நிலையிலேயே, நஜம் சேதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் நிகழ்வொன்றின் வருமானத்தின் 20 சதவீதத்தை, இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியே கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், அந்த முக்கியத்துவத்தை, ஐ.சி.சி உணர்வதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, பாகிஸ்தானுக்கெதிராக விளையாடுவதற்கு இந்தியா தவறுமாயின், அப்போட்டிக்கான முழுமையான புள்ளிகளும், தமக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .