2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

பார்சிலோனா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 13 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரின் கடந்த சனிக்கிழமை (12) இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றுள்ளது.

பார்சிலோனா, கெட்டாபே அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 6-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக போட்டியின் 19ஆவது நிமிடத்தில் முனிர் எல் ஹாடாட்டியும் 32ஆவது, 51ஆவது நிமிடங்களில் நேமரும் 40ஆவது நிமிடத்தில் லியனல் மெஸ்ஸியும் 57ஆவது நிமிடத்தில் அர்டா துரானும் கோல்களைப் பெற்றனர். போட்டியின் எட்டாவது நிமிடத்தில் ‘ஒவ்ண் கோல்’ முறையில் கோலொன்று பெறப்பட்டிருந்தது.

இப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன் 75 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் பார்சிலோனா முதலிடம் வகிப்பதுடன் இரண்டாமிடத்தில் 67 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .