2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பெறுபேறு குறித்து மிஸ்பா மகிழ்ச்சி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பாகிஸ்தான் அணி வெளிப்படுத்திய திறமை வெளிப்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக, பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில், வெற்றிக்கு அருகில் வந்து, போராடியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெற்றிபெறுவதற்கு 490 என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 4ஆவது நாள் முழுவதும் போராடியதோடு, 5ஆவது நாளன்று, 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க 108 ஓட்டங்கள் தேவை என்ற நிலையுடன் களமிறங்கியது. அன்று போராடிய அவ்வணி, 39 ஓட்டங்களால் மாத்திரமே தோல்வியடைந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மிஸ்பா உல் ஹக், "பாகிஸ்தான் அணியின் தலைவராக, அணி இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முதல் இனிங்ஸில் 142 ஓட்டங்களுக்கு நாங்கள் ஆட்டமிழந்த போது, 490 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடினோம். எங்களது துடுப்பாட்ட வீரர்கள் வெளிப்படுத்திய போராட்டம், அற்புதமானது. இந்தத் தொடருக்கு, முன்மாதிரியாக அது அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

"இந்த நிலைமையில், எமது வீரர்களுக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்பதை வெளிப்படுத்த முடியாது, குறிப்பாக அசத் ஷபீக். நான் பார்த்தவற்றில் அது சிறப்பான இனிங்ஸ்களில் ஒன்று. போட்டியின் நிலைமையை வைத்துப் பார்க்கும் போது, பின்வரிசை வீரர்களுடன் விளையாடும் போது, அழுத்தத்தை அவர் எதிர்கொண்ட விதம், அதிசிறப்பானது" என்று மிஸ்பா மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--