Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விவகாரத்தால், அச்சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத் தலைவர் மைக்கல் பிளட்டினி இருவருக்கும் 90 நாள் இடைக்காலத் தடை விதிக்கப்படுமெனத் தெரியவருகிறது.
இவ்வாறானதொரு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், பெப்ரவரியில் இடம்பெறவுள்ள பீபா தேர்தலுடன் பதவி விலகவுள்ள பிளட்டர், தனது 17 வருடகாலப் பதவியின் இறுதிப் பகுதியை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டவராகவே நிறைவு செய்ய வேண்டியேற்படும்.
மறுபுறத்தில், பிளட்டரின் இடத்துப் போட்டியிட எதிர்பார்க்கும் பிளட்டினியின் வாய்ப்புகளுக்கும் இது எதிரானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ண தொலைக்காட்சி உரிமங்களை, பீபாவின் முன்னாள் உப தலைவர் ஜக் வோணருக்கு முறைகேடாக விற்றதாகவும், வேறொரு சந்தர்ப்பத்தில் மைக்கல் பிளட்டினிக்கு 2011இல் 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களைத் தவறான முறையில் வழங்கினார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை ஸ்விட்ஸர்லாந்தின் நீதித் துறையினர் மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே அவர்களிருவரும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, இவர்களிருவரையும் 90 நாட்களுக்கு இடைக்காலத் தடைக்கு உட்படுத்துமாறு, இவ்விசாரணையை மேற்கொள்ளும் பிரிவு, பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை, அனேகமாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்படுகிறது.
22 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
7 hours ago