2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் டேவிட் பெக்காம் இங்கிலாந்து அணியில்

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்காக டேவிட் பெக்காம் மீண்டும்களம் இறங்குகவுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பமாக உள்ள ஐரோப்பிய கிண்ண தகுதி கான் சுற்று போட்டியில்  அவர் விளையாடவுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார்.

சீரி 'ஏ' போட்டியில் ஜெனோவா அணியுடன் ஏ.சி.மிலான் மோதியது. இந்த போட்டியின் போது,பெக்காமுக்கு கனுக்காலில் தசைநார் கிழிந்தது. இதனால், 6 மாதகாலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாட முடியவில்லை. ஆனால் அணியின் துணை பயிற்சியாளராக அவர் தென்ஆபிரிக்கா சென்றிருந்தார். தற்போது அவருடைய காயம் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் பெக்காம் மீண்டும் இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--